ஆவடி வருவாய் ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி ; மாநகராட்சி அலுவலகம் மூடல்
சென்னை அருகே ஆவடியில் வருவாய் ஆய்வாளர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடியில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடுமையான ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று ஒரே நாளில் 69 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 1089 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதக் காலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வந்த வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
நேற்று முன்தினம்
சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை
பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் மாநகராட்சி அதிகாரிகள் மத்தியிலும் மக்கள்
மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ஆவடி மாநகராட்சி மூடப்பட்டுள்ளது.
No comments