தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவகாற்று காரணமாக மழை பெய்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்றிரவு மழை வெளுத்து வாங்கியது. இன்றும் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
No comments