Header Ads

 • சற்று முன்

  இடதுசாரிகள்-திராவிட கட்சிகளின் உதவி இல்லாமல் வெற்றிபெற முடியாதா? கேள்வி -பதில்

  ரம்யா ஆவடி

  கேள்வி: கிரிமிலேயர் என்றால் என்ன? 

  பதில்: சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமே கிரிமிலேயர். முதலில் இட ஒதுக்கீடு என்றால் என்ன என்பதை தெரிவித்துக் கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பதே சாதியின் அடிப்படையில் வழங்கப்படுவது தான். ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு பின்தங்கிய சாதியினருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இட ஒதுக்கீடு. ஆனால் மத்திய அரசு கிரிமிலேயர் பெயரில் இட ஒதுக்கீடு கொண்டுவந்த நோக்கத்தையே சிதைக்க முயற்சி செய்கிறது. 

  உஷா- திருமுல்லைவாயல் 

  கேள்வி: ஆவடியில் கொரோனா பரிசோதனை மையம் வேண்டும் என்று தி. மு. க. மாவட்ட செயலாளர் சா. மு. நாசர் வைத்த கோரிக்கை என்னானது?   பதில்: அந்த கோரிக்கையை குறித்து அமைச்சர் பாண்டியராஜனே வரவேற்றார். நியாயமான கோரிக்கை என்றார். தற்போது ஒவ்வொரு வார்டாக வாகனங்களில் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல்  மருத்துவமுகாம்களில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா பரவலை தடுக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

  நாகராஜ்- முகப்பேர்

  கேள்வி : குழப்பாமல் சொல்லுங்கள், ரஜினி கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? 

  பதில்: நானும் குழப்பாமல் சொல்கிறேன். ரஜினி கட்சி தோடங்க வேண்டும் என்று பா. ஜ. க. மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழருவி மணியன் போன்றவர்கள் விரும்புகிறார்கள். அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார்கள். ஆனால் ரஜினியோ வேறொரு திட்டத்தில் இருப்பதாக தகவல் வருகிறது. தமிழகத்தில் பா. ஜ. க. ஆதரவு நிலைபாடு என்றால் அந்த படம் ஒரு வாரம் கூட ஓடாது. அதனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு வழியாக காங்கிரஸ் கூட்டணி திட்டத்தோடு களத்தில் இறங்கலாம் என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.  ரஜினி வாய்ஸ் கொடுத்தாலும் அல்லது கட்சி தொடங்கினாலும் 2021 தேர்தலோடு அவருடைய அரசியல் பேச்சு முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

  சரவணன்- சங்கராபுரம் 

  கேள்வி: பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் இத்தனை கோபம்? 


  இந்த கேள்விக்கு பெரியாரே சொன்ன விளக்கம் பொருத்தமாக இருக்கும். 

  "ரயில்ல முதல்ல ஏறுகிறவனுக்கு சீட்டு சுலபமா கிடைக்கும்!. அதனால, அவன் உட்க்காருவதற்கு பதிலா படுத்துட்டு நல்லா சொகுசா வருவான்!.. அடுத்த ஸ்டேஷன்ல கூட்டம் கூடிடும்!. புதுசா வந்தவன், படுத்துக்கொண்டிருந்த "பழைய ஆள எழுந்து உட்காருங்க"ன்னு சொல்லுவான்!.. படுத்து சொகுசா வந்தவரும் வேற வழியில்லாம எழுந்துருவாரு!.. ஆனாலும் சொகுசா வந்தவருக்கு, எழுப்பி விட்டவன் மேல ஒரு கோவம் இருந்துட்டே இருக்கும்!..

   "மேல கை படுது!, கால் படுது" ன்னு எதாவது சொல்லி எழுப்பிவிட்டவர் மேல கோவத்த காட்டுவாரு!..ஒரு அரைமணிநேரம் சொகுசா படுத்து வந்தவனுக்கே,அந்த சொகுசு போனவுடனே எழுப்பி விட்டவன் மேல கோவம் வருதே?, 2000 வருஷமா சொகுசா இருந்தவனையில்லயா நாம எழுப்பி உக்கார வச்சிருக்கோம்!, அவனுக்கு எவ்வளவு கோவம் இருக்கும்! நம்மள திட்டத்தானே செய்வான்

  ராஜேஷ் -ஆவடி

  கேள்வி: நீங்கள் தல அஜித் ரசிகரா? தளபதி விஜய் ரசிகரா? 

  பதில்: நான் களத்தில் இருப்பவரின் ரசிகன்

  கேள்வி: கவிசிற்பி நெல்லை
  தி. மு. க. வின் இரண்டாவது பொது செயலாளர் நாவலரை பற்றி? 

  பதில்: தம்பி வா... தலைமை ஏற்க வா... உன் ஆணைக்கு கட்டுப்படுகிறோம் என்று அறிஞர் அண்ணா அழைக்கும் அளவிற்கு மரியாதைக்குரிய மனிதர். சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான முடிவு எடுக்க தெரியாததால் உதிர்ந்த ரோமம் என்று ஜெயலலிதா வர்ணிக்கும் அளவிற்கு மாரிப்போனது வேதனைக்குறியது.

  சிந்தனை செல்வன். தஞ்சை 
  கேள்வி : இந்தியாவில் சாதி ஒழிய வாய்ப்பு உள்ளதா? 

  "சதி" க்கு கால் முலைத்து "சாதி" தோன்றியது என்றார் முன்னாள் முதல்வர் கலைஞர். அதனால் சதிக்காரர்கள் இருக்கும் வரை சாதிக்கு ஆதரவாளர்களும் இருப்பார்கள். 
  அதுசரி பா. ம. க. போன்ற கட்சிகள் மீது உங்களுக்கென்ன அவ்வளவு கோபம்?

  இரா. கிரி- அய்யப்பன் தாங்கள். 
  கேள்வி: கவிபேரரசு வைரமுத்து திரைத்துறையில் 40 ஆண்டு சாதனை குறித்து? 

  பதில்: தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷியம் கவிஞர் வைரமுத்து. அவர் சினிமாவில் மட்டுமல்ல, தான் ஏற்றுக்கொண்ட சமூக நீதி கொள்கையிலும் சமரசம் இல்லாமல் பயணம் செய்துவரும் போராட்ட கவிஞர்.

  மகேந்திரன் -வேலூர் 
  கேள்வி: இடதுசாரிகள் திராவிட கட்சிகளின் துணை இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாதா? 

  பதில்: நிச்சயமாக முடியும். கேரளாவில்! 

  மேற்குவங்கம் மாநிலத்தில் 34 ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்து மக்களால் மதிக்கப்பட்டவர் ஜோதிபாசு. அவரை தேடி பிரதமர் பதவி மூன்றுமுறை வந்தது. அப்பொழுது அந்த பதவியை ஏற்றுக் கொண்டு நாட்டிற்கு தலைமை தாங்கியிருந்தால் இந்தியாவின் கட்டமைப்பு மாறியிருக்கும். அந்த வாய்ப்பை இடதுசாரிகள் தவறவிட்டது வரலாற்று பிழை.

  வடிவேல் - சென்னை பாடி.

  கேள்வி: கவனமாக நடந்துக்கொள் என்கிறார்களே, அதைப்பற்றி கூறமுடியுமா? 

  நம்மைச் சுற்றி நிகழும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு மனதை ஒன்றில் மட்டும் குவிப்பதே கவனம். உதாரணத்திற்கு வீடுகளில் உள்ள பல்லிகள் பூச்சிகளை பிடிக்கும்போது எவ்வளவு கவனமாக செயல்படுகின்றன என்பதை பார்த்தால் கவனத்தின் பரிமாணம் புரியும். மென்மையாக எந்த சப்தமும் இல்லாமல் அடிமேல் அடி எடுத்து வைத்து பொறுமை காட்டித் தட்டான்பூச்சியின் இறக்கைகளை கவ்வி சிறிது சிறிதாக விழுங்கும். அதேபோல் நாம் எண்ணங்களை சிதரவிடாமல் முக்கியமானதில் மட்டும்  கவனம் செலுத்தினால் அதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad