Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐஏஎஸ் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம்.

     

    முன்னாள் முதல்வர் கலைஞரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை ஏற்று கவனித்து கொண்ட அமுதா ஐஏஎஸ், அப்போது தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டவர். 

    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளையும் அமுதா பொறுப்பேற்று நடத்தியுள்ளார்.

    அமுதா தற்போது உத்தரகாண்ட் மாநிலம் மசூரியில் உள்ள ஐஏஎஸ் அகாதமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

    மதுரையை சேர்ந்த அமுதா 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார். திமுக, அதிமுக, ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யலாம் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த உடனேயே, இது தொடர்பாக அங்கு நிர்வகிக்கும் பணி அமுதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அமுதா பெரிதும் கவனிக்கப்பட்டார்.

    ஐந்தே மணி நேரத்தில் இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக கவனித்தார் அமுதா. அப்போது சமூக ஊடகங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. தற்போது பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad