Header Ads

  • சற்று முன்

    இந்தியா-சீனா: நரேந்திர மோடி லடாக் பயணம்.


    இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் மாத மத்தியில் எல்லைப் பகுதியில் நடந்த மோதலின் பின்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி லடாக் ஒன்றிய பிரதேசத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

    வெள்ளிக்கிழமை, காலை அவர் லடாக்கில் உள்ள லே பகுதியை சென்றடைந்ததாக அகில இந்திய வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

    லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்ட பின்பு லடாக் பகுதியில் பதற்ற நிலையில் நீடிக்கிறது.

    இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழலை அறிவதற்கும் அங்கு காவல் பணியில் இருக்கும் பாதுகாப்பு படையினரை உற்சாகப்படுத்துவதற்காகவும் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்துள்ளதாக கருதப்படுகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad