இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை : ரஷ்யா உதவியதாக தகவல்.
டெல்லி : இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவிடம் பேசி 10 இந்திய ராணுவ வீரர்களை விடுவிக்க ரஷ்யா உதவியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கல்வான் பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர். 10 வீரர்களை சீனா சிறை பிடித்தது என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டது. பதட்டத்தை தணிக்க ரஷ்யா இருநாடுகளுடன் இணைந்து ஜூன் 23ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
எல்லையில் பதட்டத்தை தணிப்பது, சிறை பிடித்த இந்திய ராணுவ வீரர்களை விடுவிப்பது என்பது கூட்டத்தின் முக்கிய அம்சங்களாக பேசப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ரஷ்யா பங்கெடுத்து வீரர்களை விடுவிக்க பெரிய அளவில் உதவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியா, சீனா இரண்டு நாடுகளுக்கும் ரஷ்யா நட்பு நாடாக இருப்பதால், இந்த முயற்சியை மேற்கொண்டு இருந்தது என்று கூறப்படுகிறது.
No comments