Header Ads

  • சற்று முன்

    ராகுல் காந்தி தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என .காங்கிரஸ் எம்.பி.கள் கோரிக்கை!!

    கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்த்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது இதனை அடுத்து ராகுல் காந்தி தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பிறகு இடைக்கால காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி.க்களுடன். காணொலி காட்சிகள் மூலம் ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில். கொரோனா பரவல் விவகாரம் மற்றும் நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்

    கூட்டத்தில் பேசிய எம்.பி.கள் லாடக் மோதல் விவகாரம் உள்ளிட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியதோடு. தொகுதி மேம்பாட்டு நிதி வழங்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தனர்

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற காங்கிரஸ் தலைமை கொறாட கே.சுரேஷ் . ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது இந்த கோரிக்கையை ஆலோசனையில் பங்கேற்ற மாணிக்கம் தாகூர், கவரவ் கோகாய், ஆண்டோ அந்தோணி, குர்ஜீத் சிங் அவுஜிலா, சப்தகிரி சங்கர் உலாகா உள்ளிட்ட பெரும்பாலான எம்.பி.கள் வழிமொழிந்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஆணால் இந்த கோரிக்கையை குறித்து சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தியோ எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad