Header Ads

  • சற்று முன்

    சச்சின் பைலட் பதவி நீக்கம் வருத்தம் அளிக்கிறது – காங்கிரஸ் எம்.பி சசி தரூர்.

    .

    ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் நீக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ட்வீட்  செய்துள்ளார்.

    ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடிய தூக்கிய சச்சின் பைலட்,  துணை முதல் மந்திரி பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும்  அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.. சச்சின் பைலட்டிற்கு ஆதரவு தெரிவித்த இரண்டு அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் தனது ட்டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ”சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து விலகுவதை கண்டு வருத்தமடைகிறேன். அவரை கட்சியில் சிறந்த நபர்களில் ஒருவராகவும், எதிர்காலமாகவும் நினைத்திருந்தேன். ஆனால் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. அவர் கட்சியிலிருந்து விலகுவதை விட, இணைந்து செயல்பட்டு கட்சியை மேலும் திறம்பட செயல்படுத்தி முன்னேற்றம் காணலாம், எங்கள் கனவுகளையும் நிறைவேற்றலாம்.” என்று பதிவிட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad