அமித்தாபச்சனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா.
பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன்
ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்க்கொண்டபோது
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை
அடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு. அவர்கள் இருவருக்கும் சிகிச்சை
அளிக்கப்படுகிறது
இன்று காலை மும்பை நானாவதி
மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 77 வயதான நடிகர் அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே
தென்படுகின்றன. அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா
ராய் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று மராட்டிய சுகாதாரத்துறை
மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமிதாப்
பச்சனின் மருமகள் மற்றும் அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும்
கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களது மகள்
ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உறுதிப்படுத்தி உள்ளார்.
No comments