மேட்டுப்பாளையத்தில் மேலும் ஒரு யானை பரிதாபமாக உயிரிழப்பு.
கேரள
மாநிலத்தில் அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் காயமடைந்து
கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவம் அனைவரையும்
உலுக்கியது. யானைகளின் அகால மரணம் குறித்த விவாதத்தையும் அது எழுப்பியது. எனினும், யானைகள் கொடூரமாகக் கொல்லப்படும் அவலம்
தொடரவே செய்கிறது. தமிழகத்திலும் இதே நிலைதான்.
கோவை வனக்கோட்டத்தில் 6 மாதங்களிள் 14 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதன. தமிழகத்தில் யானைகள் உயிரிழப்பின் முக்கிய மாவட்டமான கோவை மாவட்ட வனப்பகுதியில் ஊரடங்கு காலத்தில் மட்டும் 12 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 6 யானைகள் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், இன்று கோவை
மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மேலும் ஒரு யானை வாயில் காயத்துடன் மயங்கி விழுந்து
பரிதாபமாக உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து யானைகள் உயிரிழப்பின் காரணமாக வன உயிரின
ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
No comments