சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட; ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல்..
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சிபிஐ-யும் இரு வழக்குப்பதிவை செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் சிபிஐ தனதுவிசாரணையை தொடங்கும் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,
கைது
செய்யப்பட்டுள்ள
ஆய்வாளர்
ஸ்ரீதர்
ஜாமீன்
கோரி
தூத்துக்குடி
முதன்மை
அமர்வு
நீதிமன்றத்தில்
மனுதாக்கல்
செய்துள்ளார்.
சிறையில்
உள்ள
உதவி
ஆய்வாளர்
பாலகிருஷ்ணனும்,
ஜாமின்
கேட்டு
மனு
தாக்கல்
செய்துள்ளார். காணொலி வாயிலாக இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனுவை வரும் 13 ஆம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
No comments