இளைஞர்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள் - உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு மோடி உரை..
உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்த்துகளை தெறிவித்த பிரதமர் மோடி. கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் பலர் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த நாள் உங்கள் திறமைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மிகப்பெரிய பலம் புதிய திறன்களைப் பெறுவதாகும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகிற்கு புதிய சவால்களை முன்வைத்துள்ளது, இதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கொரோனா” வேலைகளின் தன்மையை மாற்றியுள்ளது, , இது நம் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. இதனால் நமது இளைஞர்கள் புதிய திறன்களைப் பின்பற்ற வேண்டும்,
இளைஞர்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் பாதையை மாற்றி கொள்ள முடியும்.புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் உங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.இது உங்களை தன்னம்பிக்கை கொள்ள செய்யும்.
இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது. ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த விதத்திலும் விட்டுவிடக்கூடாது. என்று அவர் கூறினார்.
No comments