Header Ads

  • சற்று முன்

    காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட்; தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு



    கொரோனா அச்சம் காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் நடத்தப்படவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு  ஒத்தி வைக்கப்பட்டது. இப்பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்  அதிகரித்ததன் காரணமாக.இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு

     

    இறுதியில் அனைத்து மாணவர்களும் ஆல் -பாஸ் என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்..பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், அவர்களது வருகை பதிவேட்டின் படியும் அவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவுவிட்டிருந்தார்.

     

    .இந்த நிலையில் நேற்று தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதாத  மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட வேண்டுமென தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad