Header Ads

  • சற்று முன்

    ஆவடி அருகே முட்புதரில் வீசிச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை...

     


    ஆவடி அருகே ஆயில்சேரியில்  பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் வீசிச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

     ஆவடி அடுத்த ஆயில்சேரி, அருணாச்சலநகர் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் குழந்தை ஒன்று கிடப்பதாக நேற்று மாலை ஆவடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று முட்புதரில் பார்வையிட்டனர். அப்போது அங்கு ஒரு துணியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன, தொப்புள் கொடியுடன் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மூடி வைக்கப்பட்டிருந்தது.


    இதனையடுத்து, போலீசார் குழந்தையை உடனடியாக மீட்டு சோராஞ்சேரியில் உள்ள சுகாதார மையத்தில் கொண்டு சேர்த்தனர். அங்கு, மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு, குழந்தை உடல்நிலை சீரானது தெரியவந்தது. பின்னர், திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல காப்பக ஊழியர்கள் விரைந்து வந்து பச்சிளம் குழந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும்  குழந்தையை  முட்புதரில் வீசி சென்றது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad