Header Ads

  • சற்று முன்

    உடலை வருத்தி உச்சம் தொட்ட என் கமல்-- இயக்குனர் பாரதிராஜா நெகிழ்சி

     



    கமல்ஹாசன் சினிமாத்துறையில் நுழைந்து 61 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதை அடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமான கமல்ஹாசன், தனது இளம்வயதிலேயே சினிமாவின் அனைத்து பகுதிகளிலும் வல்லமை பெற்றவராக முன்னேறினார். தன்னுடைய 22 வயதிலே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் வெள்ளி விழா கண்ட படங்கள் கொடுத்து சாதனை புரிந்தார். ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என வசூலை பற்றிக் கவலைப்படாமல் நிறைய எஸ்பிரிமெண்ட் படங்கள் எடுத்தவர் கமல்.


    ஹாலிவுட் தரத்திலான டெக்னாலஜிகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய கலைக் காதலர் கமல். நடிப்பு, நடனம், பாடல், இசை, எழுத்து, இயக்கம் என அனைத்து வித்தைகளையும் தானே கற்றுக்கொண்ட ஏகலைவன். இப்படி எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தியுள்ள கமல் ஹாசன் திரைத்துறையில் நுழைந்து 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றர்.


    கமலின் சினிமா கேரியரில் மிகமுக்கிய படம் பதினாறு வயதினிலே. அதில் கமலின் சப்பாணி கேரக்ட்டரை யாராலும் மறக்கமுடியாது. கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாய்ண்ட் ஏற்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் தற்போது கமலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

    “இந்திய திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து

    பல்வேறு தொழில் நுடபங்கள், பல நூறு காதாபாத்திரங்கள்,

    உடலை வருத்தி

    உச்சம் தொட்ட

    உலக நாயகன்

    என் கமலுக்கு

    வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad