இனி எல்லோருக்கும் ஈஸியாக இ-பாஸ் கிடைக்கும்..!!. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கு அமல்படுத்திய பின்னர், வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்குச் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இதனை தொடர்ந்து இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெற வெளியூர்களுக்குச் செல்ல விரும்புவோர், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அவசர பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பம் செய்து பாஸ் பெற்று செல்கின்றனர்.
ஆனால், இந்த
இ-பாஸ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. சரியான காரணங்கள்
இருந்தும் முறையான
ஆவணங்கள் இல்லாததால் ஏராளமானோர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். உரிய காரணங்களைச் சொல்லி விண்ணப்பித்தாலும், இ-பாஸ் கிடைப்பதில்லை
எனவும், இதன்மூலம் இ-பாஸ் பெற்றுத்தருவதாகக் கூறி பலர் மோசடியில் ஈடுபடுவதாகவும் புகார்கள்
எழுந்த வண்ணம் உள்ளன..
எனவே இந்த இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று
எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், தமிழக அரசோ இ-பாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும்
அறிவித்ததுடன், இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டந்தோறும் இரு
குழுக்கள் அமைத்தும் உத்தரவிட்டது.
இந்த
நிலையில் தற்போது இ பாஸ் நடைமுறையில் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்..
அதில், ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் . பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் வரும் 17 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments