சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் தோனி... பல்வேறு தரப்பினரும் புகழாரம்..

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட்
அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.. 39 வயதான தோனி கடந்த 16 ஆண்டுகளாக நட்சத்திர வீரராக ஜொலித்து
வந்தார். 350 ஒரு நாள் போட்டிகள் - 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி,
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தோனிக்கு , நாடு முழுவதும் லட்சக்கணக்கான
ரசிகர்கள் உள்ளனர். இருந்தபோதிலும் தமிழகத்தில் அவருக்கான ரசிகர்கள் ஏராளம்.. அவரை " தல " என்று அன்புடன் அழைத்து கொண்டாடுகிறார்கள்..
கடந்த 2019 ம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி, உலக கோப்பை
கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில்
தோல்வியடைந்த பின் கடந்த ஓராண்டாகவே தோனி, எந்தவொரு போட்டிகளிலும்
விளையாடவில்லை. ஏற்கனவே, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு
பெற்று விட்டார்.
இந்த சூழலில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்
இருந்து மகேந்திர சிங் தோனி, ஓய்வு பெறுவதாக, நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக
வெளியிட்டார்.
செப்டம்பர் 19 - ல் துவங்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க
இந்திய வீரர்கள் தயாராகி வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி, சென்னையில் பயிற்சியில்
ஈடுபட்டுள்ளார்.. கூல் கேப்டன் என அனைவராலும் அழைக்கப்படும் தோனியின் ஓய்வு அறிவிப்பு, ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது.
இதனையொட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு புகழாரம் சூட்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ”இந்திய கிரிக்கெட்டில் தோனியின் ஈடு இணையற்ற பங்களிப்புக்காக, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான அவரது கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி.. அடுத்து வரும் காலங்களில் இந்திய கிரிக்கெட்டை வலுப்படுத்த அவர் தொடர்ந்து பங்களிப்பார் என்று நம்புவதாகவும், உலக கிரிக்கெட் இனி ஹெலிகாப்டர் ஷாட்டுகளை இழக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்
, “2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனியுடன்
இணைந்து விளையாடி கோப்பையை கைப்பற்றியது தன் வாழ்நாளில் மறக்க முடியாத
சிறந்த தருணமாகும். மேலும் இந்திய கிரிக்கெட்டில்
தோனியில் பங்களிப்பு மகத்தானது” என்று தெரிவித்துள்ளார்.
Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings. pic.twitter.com/5lRYyPFXcp
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2020
இதேபோல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, “நாட்டிற்காக தோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அளிக்கும்.. சக வீரராக தோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு தன்னுள் நீங்காமல் இருக்கும் என்றும், அவருக்கு தலை வணங்குகிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.
Every cricketer has to end his journey one day, but still when someone you've gotten to know so closely announces that decision, you feel the emotion much more. What you've done for the country will always remain in everyone's heart...... pic.twitter.com/0CuwjwGiiS
— Virat Kohli (@imVkohli) August 15, 2020
இதேபோல், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.. #thankyoumsdhoni, #dhoniretires போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றனர்..
#MSDhoni's name will be etched in history for leading the Indian cricket team in 331 international matches and for being the only #captaincool to win 3 championships for the nation.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 16, 2020
His laurel and fame will be cherished by every Indian. pic.twitter.com/KBDJwoRt5V
The era of #MSDhoni will be missed. Thank you for your exceptional contributions to cricket and agile leadership, Captain Cool. Wish you the best for the next innings. https://t.co/Ic1NnnVvyo
— M.K.Stalin (@mkstalin) August 15, 2020
No comments