Header Ads

  • சற்று முன்

    பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சம உரிமை- உச்சநீதிமன்றம் தீர்ப்பு... 31 வருடத்திற்கு முன்பே கெத்து காட்டிய கலைஞர்..

    குடும்பச் சொத்தில், எந்தவித நிபந்தனையுமின்றி பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்று 1929 ம் ஆண்டு தந்தை பெரியார் கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானமும் நிறைவேற்றினார். 1956 ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்து குடும்ப சட்டப்படி ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சொத்தில் உரிமை உண்டு என்று சட்டம் இயற்றப்பட்டது. 


    அதாவது ஒரு பெற்றோருக்கு மூன்று பெண் பிள்ளைகள், இரண்டு ஆண் மகன்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த குடும்பத்தில் தந்தை இறந்து போனால் தாயாரோடு சேர்த்து ஆறு பேருக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று சட்டம் இயற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 1989 ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி 1956 ல் கொண்டு வந்த சட்டத்தை திருத்தி பூர்விக குடும்ப சொத்திலும் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்தார். அது நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. 


    தற்போது பெண்களுக்கான சொத்துரிமை குறித்த விவாதத்தை கையிலெடுத்த உச்சநீதிமன்றம் , பெண்களுக்கு பூர்வீக சொத்திலும் சம உரிமை உண்டு என்று தெளிவுப்படுத்தி உள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad