நடிகர் சுஷாந்த் சிங் மரணம்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி...
எம்.எஸ்.தோனி திரைப்படம் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி, மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் தற்கொலை தான் என மும்பை காவல்துறை தெரிவித்த நிலையில்,அவரது மரணம் தொடர்பான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.. சுஷாந்த் சிங் மரணம் தொடபாக பாலிவுட் திரைப்பிரபலங்கள் 40 பேரிடம் மும்பை காவல்துறை விசாரணை நடத்தியது..
சுஷாந்த் மரணத்திற்கு அவரது காதலியும் இந்தி நடிகையுமான ரியா சக்ரபர்த்திதான் காரணம் என சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பீஹார் தலைநகர் பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. அதன்பேரில் ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. பின்னர் இந்த வழக்கு பீகார் அரசின் பரிந்துரையின்பேரில் சிபிஐ வசம் அளிக்கப்பட்டது.
இதனிடையே பாட்னா காவல்துறை பதிந்த வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி, நடிகை ரியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம்
குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..
மேலும், சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் மும்பை காவல்துறை, சிபிஐ தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சுஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பிஹாரில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது செல்லுபடியாகும் என்றும், சிபிஐ விசாரணையைக் கோர பிஹாருக்கு உரிமையுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
No comments