Header Ads

  • சற்று முன்

    மிரட்டலான தோற்றத்தில் அருண் விஜய்.. ‘சினம்’ படத்தின் 2ஆவது போஸ்டர் வெளியீடு..



    மாஃபிய படத்திற்குப் பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சினம்’ .. 

    பாண்டவர் பூமி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அருண் விஜய், பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இடம் தெரியாமல் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் அவருக்கு நல்ல கம்பேக்காக அமைந்தது. அதிலிருந்து சிறந்த கதைகளை  தேர்வு செய்து நடித்து வருகிறார். 


    மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தடம். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படத்திலும், மாஃபியா படத்திலும் நடித்தார் அருண் விஜய். இதனைத்தொடர்ந்து அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

     

    இதற்கிடையில் என்.ஆர்.ஜி குமரவேலன் இயக்கத்தில்  ’சினம்’ படத்தில் நடிக்கத் தொடங்கினார். அருண் விஜய்யின் 30ஆவது படமாஅன இப்படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் கார்த்தி கடந்த ஆண்டு வெளியிட்டார். 

     

     இதில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். அருண் விஜயின் தந்தையும்  நடிகருமான  விஜயகுமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார். ஷபீர் இசையமைக்கிறார். 


    ஏற்கெனவே இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.. அதில் மிரட்டலான தோற்றத்தில் அருண் விஜய் தோன்றுகிறார்.. இந்த 2 ஆவது போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..  

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad