ஆவடி அருகே சாலையில் நடந்து சென்ற நபரை வெட்டி செல்ஃபோன் பறிப்பு...
ஆவடி அடுத்த பட்டாபிராமைச் சேர்ந்த ஆரூன்/34 என்பவர் பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.. நேற்று நள்ளிரவில் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், ஆருனிடம் செல்ஃபோனை கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் செல்ஃபோனை தர மறுத்ததால், அந்த கும்பல் அரிவாளால் வெட்டி செல்போனை பறித்துச் சென்றுள்ளது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த ஆரூனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கொள்ளை கும்பல், பட்டாபிராமில் உள்ள மளிகை கடை ஒன்றின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது..
No comments