Header Ads

  • சற்று முன்

    ”நாங்க கை காட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும்.. வேட்பாளரை ஜெயிக்க வைச்சா கார் பரிசு.. ”- புதிய யுக்திகளுடன் களமிறங்கும் பாஜக....

     

     



    தமிழகத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. அதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் இறங்கிவிட்டன..  ஒருபுறம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அதிமுகவில் உள்கட்சிப் பூசல் ஆரம்பித்துவிட்டது.. கடந்த மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற நம்பிக்கையோடு சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என திமுக முயற்சித்து வருகிறது. 

    அதேபோல், பாஜவும் தமிழகத்தில் காலுன்ற கடுமையாக முயற்சித்து வருகிறது.. ஏற்கெனவே கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அந்தக் கூட்டணியைத் தொடருமா என்ற கேள்வியெழுந்துள்ளது..  

     இந்நிலையில் , 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கை காட்டும் கட்சியே மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

    இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ”2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக அரசியலில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும்.

    இந்த சூழலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
    வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் கணிசமான பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அமர்ந்திருப்பார்கள்”என்று மாநிலத் தலைவர்  முருகன்  பேசியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad