Header Ads

  • சற்று முன்

    தங்கத்தின் விலை தாறுமாறு; ஏழைகளுக்கு எட்டாத கனியாக மாறிவருகிறது தங்கம்

     

    கொரோனாவினால் பெரும்பான்மையானமக்கள் வறுமையில் வாழ்ந்து வரும் நிலையில் தங்கத்தின் விலை மட்டும் தினமும் உயர்ந்து ஏழைகளின் எட்டாத கனியாக மாறிவருகிறது.

    உலகின் மிகப் பெரிய அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும், சீனாவும் தான். தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை 5314 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பத்து கிராம் 53,140 என்று உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பினால் மக்கள் வாங்கும் சக்தி குறைந்து போனது. அதனால் தங்கம் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அனைத்தும் முடங்கி கிடக்கிறது. ஆனாலும் விலை ஏற்றம் மட்டும் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு உயர்ந்தது கொண்டே இருக்கிறது. இதனால் பல ஏழை பெண்களின் திருமண கனவை பாழாக்கும் அபாயம் இருப்பதாக பல சமூக அறிஞர்கள் கவலையடைந்து வருகின்றனர். தங்கம் வெறும் பொருளாதார முதலீடாக பார்க்காமல் மக்களின் வாழ்க்கையில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது. 

    பணத்தை வங்கியில் சேமிப்பதை விடவும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமானதாக இருக்கும்.  

    ஆனால் கிராமங்கள் நிறைந்த இந்தியாவில் மூன்று வேலை உணவுக்கு கூட போராடும் மக்களே அதிகம் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த தங்கத்தின் விலை உயர்வினால் அந்த ஏழை பெற்றோர்கள் தான் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள். ஏழை பெண் பிள்ளைகளின் திருமண கனவை சிதைக்கும் என்று  பொருளாதார ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்தியாவில் தங்கம் என்பது, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு பொருள். இறக்குமதி செய்யும்போது 12.5% அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. 3% ஜிஎஸ்டி இருக்கிறது. அதனால், இந்தியாவில் தங்கத்தின் விலை 15-16% அளவுக்கு அதிகமாக விற்பனை செய்வதாக பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

    எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தவே முடியாத அளவிற்கு நமது சமூக கட்டமைப்பு இருக்கிறது. ஒரு வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்தால், 5.3 சதவீதம்தான் வட்டி கிடைக்கும். இதில் வருமானவரி பிடித்தம் செய்வார்கள். வங்கியில் 100 ரூபாய் வைத்திருந்தால்,  ரூ. 104.75 தான் கிடைக்கும். ஆக, பணத்தைச் சேமிப்பதற்கு பதில் தங்கத்தை வாங்கி சேமிப்பதற்குதான் விரும்புகிறார்கள்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad