Header Ads

  • சற்று முன்

    சூர்யாவிடம் பக்குவம் இருக்கிறது; பதற்றம் இல்லை - வைரமுத்து புகழாரம்...

     

     

    சர்ச்சைக்கு பெயர்போன நடிகை மீரா மிதுன், சமீப காலமாக சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார்...விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து அவதூறு பேசியதாக பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல் நிலையத்தில்  புகாரளித்துள்ளனர்.



    இந்த விவகாரத்தை நடிகர் விஜய்யும்,சூர்யாவும் கண்டுகொள்ளாத நிலையில்,  இயக்குநர் இமயம் பாரதிராஜா மீரா மிதுனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்த நடிகர் சூர்யா, “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றும் தெரிவித்திருந்தார்.



    தன் மீது அவதூறு பேசியவர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், பாரதிராஜா அவர்களுக்கு உளமார்ந்த நன்றி என்று, தெரிவித்திருந்தார்.. சூர்யா தெரிவித்த கருத்து பலரது பாராட்டுக்களையும் பெற்றது.. பிரச்னைகளை பக்குவத்துடன் கையாள்வதாக அனைவரும் கூறினர்.  இந்நிலையில் சூர்யாவின் அணுகுமுறையை பாராட்டி கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.

    அதில்,

    “சுமத்தப்பட்ட பழியின்மீது
    சூர்யாவின் அணுகுமுறை நன்று.
    பக்குவப்பட்டவர்கள்
    பதற்றமுறுவதில்லை;
    பாராட்டுகிறேன்.
    நதியோடு போகும் நுரையோடு
    கரை கைகலப்பதில்லை.” என்று  வைரமுத்து பதிவிட்டுள்ளார்..

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad