ஆவடி அருகே மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்.
ஆவடி அருகே மூட்டை ,மூட்டையாக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள " குட்கா " வை நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை ஆவடி அடுத்த காட்டூர் சிட்கோவில் குட்கா,பான்மசாலா போன்ற தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி. குமரன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காட்டூர் சிப்காட்டில் சந்தேகத்திற்குறிய அம்மன் ரெகுலர் சர்வீஸ் என்ற குடோனை சோதனை செய்தனர். அதில் மூட்டை ,மூட்டையாக இரண்டு கண்டைனர் மற்றும் மூன்று குட்டி யானை வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குட்கா இருப்பதை கண்டுபிடித்தனர். 25 டன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அங்கே பணியில் இருந்த பாலாஜி உட்பட மூன்று பேரை கைது செய்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் குட்கா கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள முருகன் என்ற குற்றவாளியை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா 2 கோடி மதிப்புள்ளது என்றும் இவை கர்னாடக மாநிலத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வருவது போல் கண்டைனர் லாரிகளில் வாகன எண்ணை மாற்றி ,மாற்றி கடத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
No comments