Header Ads

  • சற்று முன்

    அ.தி.மு.க.வில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்??.. ஈபிஎஸ் - ஓபிஎஸுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் அமைச்சர்கள்!!!...




    அ.தி.மு.க வில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில்  ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இடையே கடும் போட்டி இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே..  ஆனால் வெளியே தெரியாமல்  மேலும் மூன்று பேர் ரகசியமாக டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்களாம்.. 


    கடந்த சில வாரங்களாகவே ஓ.பி.எஸ் மிகுந்த மன வேதனையில் இருந்து வருகிறாராம். அதுவும் சுதந்திர தினத்தின் போது தலைமை செயலக மேலதிகாரி ஒருவரால் அவமானப் படுத்தப்பட்ட,  அன்று முழுவதும் நான்கு, ஐந்து அமைச்சர்கள் சமாதானப் படலம் நடத்தினார்கள். அதன் பின்னர் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு ஒருவழியாக அந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். 



    இந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அ.தி.மு.க.வில் இப்போது இருக்கும் கோஷ்டி பூசலே இருக்காது எனவும், அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒருபுறம் டெல்லியில் காய் நகர்த்தி வருகின்றனர்.



     இதற்கிடையில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முதல்வர் வேட்பாளர் ரேசில் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ளாட்சி துறையில் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் டெண்டர் கொடுத்து ஆதரவாளர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் வேலுமணி. அதோடு தன்னை முதல்வர் வேட்பாளராக்கினால் முழு செலவையும் ஏற்றுக் கொள்வதோடு, அ.தி.மு.க.-பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என்றும் டெல்லியில் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 



     அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 30 எம்எல்ஏ க்களை தனக்கு ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறாராம்..  அவர்களுக்கு மாதா மாதம் செலவுக்கு பணமும் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா காலத்தில் ஓய்வு இல்லாமல் உழைத்து மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்றுள்ளதாகவும், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் நமது கூட்டணி உறுதியாக வெற்றிபெறும் என்று மேலிடத்தில் நம்பிக்கையை ஊட்டி  காய் நகர்த்தி வருகின்றார். ஆனால் பாஜக தலைவர்கள் மனதில் நீங்கா இடம்பெற்று இருப்பது ஓபிஎஸ் மட்டுமே என்று அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு பேசி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad