Header Ads

  • சற்று முன்

    ஆவடி மாநகராட்சியின் அலட்சியம்: கண்ணீர் விடும் களப்பணியாளர்கள்.

    ஆவடி மாநகராட்சியில் கொரோனா அவசர காலப் பணிக்காக தற்காலிகமாக 400 களப்பணியாளர்களை வேலைக்கு எடுத்தனர். ஒப்பந்த ஊழியர்களாக எடுக்கப்பட்ட அவர்களுக்கு தினம் 300 ரூபாய் ஊதியம் என்றும், ஆனால் ஒரு நபருக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் ரூபாய் கூடுதல் என்றும் கூறப்படுகிறது. 

    களப்பணியாளர்களின் முக்கிய பணி, வீடுவீடாக சென்று கபசூர குடிநீர் வழங்குவது, புதிய தொற்று இருக்கிறதா என்று ஆய்வு செய்வது மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவு வழங்குதல் போன்ற முக்கிய பணிகளை செய்து வருகின்றனர். 

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் தனித்திருங்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் என்று அரசே அறிவித்திருக்கும் காலக்கட்டத்தில் வறுமையின் காரணமாக உயிரையும் பொருட்படுத்தாமல் இந்த ஊதியத்திற்கு வேலை செய்ய வந்திருக்கிறார்கள். அவர்களுக்கான ஊதியம் கடந்த மூன்று மாதங்களாக வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

    இது குறித்து வீடுவீடாக மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முருகன் பேசும் பொது, வறுமையின் காரணமாக ஊரடங்கு காலத்திலும் கொரோனாவிற்கு அஞ்சாமல் வேலை செய்து வருகிறோம். ஆனால் அதற்கான ஊதியம் கிடைக்காததால் மூன்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு பெரும் துயரத்தை அனுபவித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட காலத்தில் சம்பளம் கிடைக்காததால் வீட்டில் இருந்த அரை பவுன் நகையை அடகு வைத்து  உணவு பொருள் வாங்கி வருவதாக தெரிவித்தார். 

    அதேபோல் புவனேஸ்வரி என்பவர் பேசும்போது, பிள்ளைகளுக்கு பள்ளி படிப்பிற்கு பீஸ் கட்ட வேண்டும், கணவருக்கும் வேலை இல்லை, வீட்டு வாடகை கட்ட வேண்டும் என்று பேசும்போதே கண் கலங்கி விட்டார். மூன்று மாதம் சம்பளம் இல்லாமல் வேலை செய்து வருகிறேன். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிறிதும் கவலைப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். 

    இது குறித்து ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணனிடம் கேட்டபோது, களப்பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழியாகத்தான் ஊதியம் வரவேண்டும். விரைவில் வந்துவிடும் என்றார். சாதாரண தொழிலாளர்களுக்கு மூன்று மாதம் ஊதியம் வழங்கவில்லையே என்ற குற்ற உணர்வு சிறிதும் இல்லாமல் அதிகாரிகள் நடந்து கொள்வதுதான் வேதனையளிக்கிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad