கொரோனாவிற்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தக்குமார் உயிரிழந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் எம்.பி. சற்றுமுன் காலமானார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஹரிகிருஷ்ணன் தாய் தங்கம்மை ஆகியோருக்கு 1950 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். 70 வயதான வசந்தகுமாரின் மனைவி பெயர் தமிழ்ச்செல்வி ஆவார். கன்னியாகுமரி தொகுதியில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போதைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை விட 259 923 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்று அந்த தொகுதியின் 18வது உறுப்பினரானார். இவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 ம் ஆண்டு நாங்குனேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் குமரி அனந்தன் இவருடைய சகோதரர். அதேபோல் தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனின் சித்தப்பா வசந்தகுமார் ஆவார். அவருக்கு வினோத் குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய மகன்களும் தங்கமலர் என்ற மகளும் உள்ளனர்.
No comments