Header Ads

  • சற்று முன்

    தினமும் உணவு வழங்கிவந்த முதியவர் மரணம்.. பாசப்போராட்டம் நடத்திய பசுவும் கன்றும்....




    தெலுங்கானா மாநிலம் பத்ராதிரி கொத்தகூடம் மாவட்டத்திலுள்ள சாரலா கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது முதியவர் மனோகர்.  முன்னாள் ராணுவ வீரரான இவர், ராணுவத்தில் ஓய்வு பெற்ற பிறகு சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வந்தார். இவர் நாள்தோறும் தனது  வீட்டின் அருகே  இருந்த பசுவுக்கும்,  கன்றுக்கும் தினமும் உணவளிப்பதும், பழங்கள் கொடுப்பத்கை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் அந்த இரண்டு மாடுகளும் தினமும் உணவு சாப்பிட்டு வந்துள்ளன.. 



    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதியவர் மனோகர் மாரடைப்பால்  உயிரிழந்தார். இதனையடுத்து நேற்று காலை இவரது உடலை வீட்டின் முன்பாக வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வந்துள்ளனர்..  அப்போது அங்கு வந்த  பசுவும் கன்றும் மனோகரின் உடல் அருகே வந்து  அவரது முகத்தருகே நாவால் நக்கி அவரை எழுப்ப முயன்றது. பின்னர் அவருடைய காலுக்கு அருகே சென்று கவலையுடன் தலை வைத்து படுத்துகொண்டது..  கொரோனா வைரஸ் காலகட்டத்தில் இறந்த ஒருவரின் உடல் அருகே உறவினர்களே  செல்ல முன்வராத நிலையில் வாயில்லாத மிருகங்கள் நன்றி உணர்ச்சியுடன் அருகே சென்று அஞ்சலி செலுத்தியது,  உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad