விழுப்புரத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை. மருத்துவமனையின் அலட்சியம் என குற்றச்சாட்டு
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம்_ செஞ்சி அருகே உள்ள களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன். கடந்த 12 ஆம் தேதி அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பதன்கிழமை அதிகாலையில் அறையின் ஜன்னல் கம்பியில் லுங்கியை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்று குற்றச்சாட்டு 60 வயதான இருசப்பனின் உடலை கைப்பற்றி விக்கிரவாண்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,571 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் 52 ஆக உயர்ந்துள்ளது.
No comments