Header Ads

  • சற்று முன்

    சரிகிறதா அதிமுக சாம்ராஜ்ஜியம்??.. சென்னை புறநகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி ஆலோசனை???..

     


     

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை புறநகரில் ஏதாகிலும் ஒரு தொகுதியில் போட்டியிட ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    அ. தி. மு. க. வில் கடந்த சில மாதங்களாவே பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற முறையில்,  ஐந்து மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அதிருப்தியில் இருக்கும் சிலருக்கும் துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்குள் இன்னும் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என எதிர்ப்பார்க்கபடுகிறது..
    தற்போது கட்சியில் எடப்பாடியாரின் ஆதரவாளர்களுக்கே அதிகமான பதவிகள் வழங்கப்படுகின்றனவாம்.. 



    அ. தி. மு. க. என்ற மாபெரும் இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடியார் கைக்கு மாறிக்கொண்டு இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அதேபோல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் அவர் தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாநிலம் முழுவதும் தி. மு. க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதலமைச்சர் எடப்பாடியாரின் சொந்த ஊரில் திமுகவுக்கே 800 வாக்குகள் கூடுதலாக விழுந்தது.

    இதனையடுத்து உளவுத்துறை மூலம் ரகசிய சர்வே எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதோடு இரண்டு கட்சிகளும் தனியார் அமைப்புகள் மூலம் கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளன. அதில், அனைத்து முடிவுகளும் திமுகவுகே சாதகமாக வந்துள்ளது.. அ. தி. மு. க. 15 முதல் 25 தொகுதிகள் பிடித்தாலே பெரும் சந்தோஷம் என்கிற நிலையாம்.. 



     


    இதனால் அப்போதிலிருந்தே, பாதுகாப்பான வேறொரு தொகுதியில் போட்டியிட முடிவுசெய்துவிட்டாராம்.. ரகசியமாக வேறு தொகுதியை தேடும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி இறங்கிவிட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 


    இதோடு தேர்தலுக்கு பின்னர் அ. தி. மு. க. வை பிளவு படாமல் கட்சியை வழிநடத்த வேண்டிய பெரும் பொறுப்பும் எடப்பாடியாரிடம் இருக்கிறது. இதனால்தான் முதல்வர்,  சென்னை புறநகரில் உள்ள ஏதாகிலும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது..

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad