'ஜால்ரா அடிச்சுதானே சான்ஸ் வாங்கின’- பாக்யராஜ் மகனை வம்புக்கு இழுத்த மீரா மிதுன்...
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர் மீரா மிதுன்.. 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்..
அந்த நிகழ்ச்சியில் தொடங்கி தற்போது வரை, சர்ச்சைக்கு பெயர்போன மீரா மிதுன் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார்.. தமிழ் சினிமாவில் நெபோடிசம் குறித்து பேசத் தொடங்கியுள்ள மீரா, தொடர்ந்து விஜய் மற்றும் சூர்யாவையும் அவர்களது குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்..
சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், அதில் சூர்யா மற்றும் விஜய் இருவரும் சரியான ஆம்பளையா? என்றும், விஜய் மனைவி சங்கீதா மற்றும் ஜோதிகா குறித்தும் அவதூறாக பேசியிருந்தார். இனியும் சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் தன்னை திட்டினாள் அவர்களது மனைவிகளை அசிங்கமான வார்த்தைகளால் அழைப்பேன் என்றும் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.. சூர்யா மற்றும் விஜய் இருவருக்கும் புடவை மற்றும் வளையலை அனுப்புகிறேன். என்றும் அவர் பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது..
Shameless uncivilized @actorvijay @Suriya_offl fans 😡🤬 pic.twitter.com/iQAHbxVv3W
— Meera Mitun (@meera_mitun) August 4, 2020
இந்த விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் மீது, பட்டுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போலீசில் புகாரும் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் புகாரின் பேரில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.. அதோடு மீரா மிதுன் மீது கடும் கோபத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டித்தீர்த்து வருகின்றனர்..
இந்நிலையில் விஜய் ரசிகரான சாந்தனுவிடம், ரசிகர் ஒருவர் மீரா குறித்து பேசுங்கள் என கேட்டிருந்தார்.. அதற்கு பதிலளித்த சாந்தனு, “ இதை பற்றி அதிகம் பேசினால், அவர்களுக்கு தான் பப்லிசிட்டி.. அதை தவிர்த்துவிட வேண்டும் ” என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள மீரா மிதுன், ”உங்க அப்பா உன்ன ப்ரொமோட் செஞ்சும் முடியல. ஜால்ரா அடிச்சிதான மாஸ்டர் படத்துல சான்ஸ் வாங்கன. இன்னும் நல்லா ஜால்ரா அடி.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்..
I know doing more and more JALRA , CHAMCHAGIRI got you a chance in #Master even after ur dad tried to promote you 👏 Keep doing JALRA to @actorvijay 🤣 https://t.co/0cwtNuO7OC
— Meera Mitun (@meera_mitun) August 7, 2020
No comments