Header Ads

  • சற்று முன்

    பெண்களுக்கு சொத்தில் சம உரிமை - உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்..





    குடும்ப சொத்தில் பெண்களுக்கான உரிமை குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதில் தீர்ப்பளித்த நீதிமன்றம் "எவ்வித நிபந்தனையும் இல்லாமல் குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு" என்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று பதிவிட்டுள்ளார். 

     

    அவரது பதிவில், “சொத்துரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது..  சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது..” என்று தெரிவித்துள்ளார். 

    அதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உண்டு என 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் - திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது.. இந்த தீர்ப்பு பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு என்று வரவேற்றுள்ளார்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad