Header Ads

  • சற்று முன்

    கூட்டுறவு நிறுவனங்களில் வேலை வேண்டுமா?? இதோ பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்....


     

     


    கூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இங்கு கூட்டுறவு பட்டயப் பயிற்சியுடன், கணினிப் பயிற்சி, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களு பயிற்சி அளிக்கப்படுகிறது. கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு தனியே பட்டய சான்றிதழும், கணினிப் பயிற்சிக்கு தனி சான்றிதழ் மற்றும்  நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு தனி சான்றிதழ்  என மூன்று சான்றிதழ் ஒரே பயிற்சியில் வழங்கப்படும்.

     இப்பயிற்சி பெற்றவர்களுக்கு கூட்டுறவு, பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புள்ளது.  இதன்படி 2020 - 21 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. 

    தகுதிகள்: 

    இந்த பட்டயப் பயிற்சிக்கு +2 வகுப்பிம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    01.07.2020 அன்று குறைந்தபட்சம்  17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 

    பயிற்சிக்கான ஒட்டுமொத்த கட்டணம் ரூ.14,850. 


    விண்ணப்பிக்கும் முறை: 

     இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tncu.tn.gov.in  என்ற இணையதளத்தில் (16.08.2020 ) இன்று முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயனாளர்கள்  தங்களது மாவட்டத்திலுள்ள மேலாண்மை நிலைய முகவரிக்கு குரியர் அல்லது பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.. 

    விண்ணப்பங்கள் நேரில் பெற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

    விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.09.2020 ஆகும்..

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad