Header Ads

  • சற்று முன்

    அரசு தொழிற்பயிற்சி (ITI) நிலையங்களில் சேர்ந்து படிக்க வேண்டுமா?? அப்போ உடனே விண்ணப்பிக்கலாம்...

     

     


    2020 ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து படிக்க மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது..

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

    மாணவர்கள் www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளம் மூலம், விண்ணப்பக்கட்டணம் ரூ.50 செலுத்தி தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கென அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களில் 147 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன..

    இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்:16.08.2020

    இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.09.2020


    மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான தேதி விவரம் மற்றும் கலந்தாய்வு பட்டியல் இதே இணையதளத்தில் கடைசி தேதிக்குப் பின்னர் வெளியிடப்படும்.

    விண்ணப்பம்  பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் onlineitiadmission@gmail.com என்ற மின்னஞல் மூலமாகவோ, 9499055612 என்ற அலைபேசி எண்ணிற்கோ அல்லது 9499055618 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்ககம் தெரிவித்துள்ளது..  

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad