Header Ads

  • சற்று முன்

    ”வான்வழி வந்தவர்கள் மேன்மக்களும் அல்ல.. மண்வழி சென்றோர் கீழ்மக்களும் அல்ல..” - கேரள விபத்துகள் குறித்து வைரமுத்து கருத்து..

     

     

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே கடந்த 7 ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்  20 வீடுகளில் வசித்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர்.  இதனைத்தொடர்ந்து, கேரள தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 600 க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
     
    இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை 53 பேர்  மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர்.  இருப்பினும் இடைவிடாத மழை மற்றும் மேலும் நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாக மீட்புப் பணிகள் தாமதமாக நடந்து வருவதாக கூறப்பட்டது.
     
     
    ஆனால் அதே நேரத்தில்,  கோழிக்கோடு விமான விபத்து ஏற்பட்டதும் அதிரடியாக மீட்பு படைகள் களமிறங்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த இரண்டு இயற்கை பேரிடர்களை சீமான் உள்பட தமிழக அரசியல்வாதிகள் சிலர் ஒப்பீட்டு தமிழர்கள் என்பதால் நிலச்சரிவு மீட்புப் பணியில் தாமதம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்கள் இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும்  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. அவரது ட்விட்டர் பதிவில்:



    ”விமான விபத்து மீட்சியைத்

    திறம்பட நிகழ்த்திய கேரள

    ஆட்சியைப் பாராட்டுகிறோம்.

    அதேபோல் மண்ணில் புதைந்த

    மக்களுக்கும் விரைந்த மீட்பும்

    தகுந்த காப்பும் வழங்க வேண்டுகிறோம்.

    வான்வழி வந்தோர் மேன்மக்களல்லர்;

    மண்வழி சென்றோர் கீழ்மக்களல்லர் என்பது பொதுவுடைமை பூமிக்குப்

    புரியாதா என்ன? என்று குறிப்பிட்டுள்ளார்..

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad