தற்கொலை செய்துகொண்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விஜய் ரசிகர்...- இதுதான் காரணம்..
கள்ளக்குறிச்சி
மாவட்டம், ரிஷிவந்தியம்
பகுதியைச் சேர்ந்த 23 வயதே
ஆன இளைஞர் பாலமுருகன். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்கும் பாலா, சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இவர், நேற்று
தியாகதுருகத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.. வெளிநாட்டுக்குச் செல்வதற்காக முயற்சி செய்த சூழலில் அவரோட பாஸ்போர்ட் தொலைஞ்சு போய்விட்டதாம். அதோடு அவருடைய சர்டிஃபிகேட்களும் தீ விபத்தில் எரிந்து போனதால், தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த பாலா தற்கொலை முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது..
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர், ’பாலா விஜய் மாஸ்டர்’ என்ற பெயரில் டிவிட்டரில் இயங்கி வந்துள்ளார். விஜய் திரைப்படம் தொடர்பான டீசர்கள், படங்கள் போன்றவற்றை அன்றாடம் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். பாலாவின் மறைவிற்கு விஜய் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நேற்று மாலை முதல் #RIPBala என்ற ஹாஷ்டாக் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
நீங்க நெனைக்கிற மாறி லவ் failiure எனக்கு இல்லை வீட்ல பிரச்சனை அதான்...🥺
— 𝑩𝒂𝒍𝒂 𝑽𝒊𝒋𝒂𝒚ᴹᵃˢᵗᵉʳ (@AlwaysLonely07) August 11, 2020
என்னை எல்லாரும் வெறுக்குராங்க 🥺#Master
சமீப காலமாகவே விரக்தியில் இருந்து வந்த பாலா, மரணம் , இறப்பு தொடர்பாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.. அவர் கடைசியாக வெளியிட்டுள்ள ட்வீட்டில் “நீங்க நினைக்குற மாதிரி எனக்கு லவ் ஃபெய்லியர் இல்ல.. வீட்ல பிரச்னை அதான்.. எல்லோரும் என்ன வெறுக்குறாங்க” என குறிப்பிட்டிருந்தார்..
முன்னதாக, தீவிர தளபதி ரசிகரான பாலா,
”தலைவன் படம் பாக்காமலே போறன்..
தலைவனையும்..
Love U Thalaivaa" என்று தெரிவித்துள்ளார்.
தலைவன் படம் பாக்கமலே போறன் 🥺
— 𝑩𝒂𝒍𝒂 𝑽𝒊𝒋𝒂𝒚ᴹᵃˢᵗᵉʳ (@AlwaysLonely07) August 11, 2020
தலைவனையும் 😭@actorvijay Lov U Thalaivaa 🥺#Master
இதனையடுத்து நடிகர் விஜய், உயிரிழந்த பாலாவின் குடும்பத்தினரை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார்..
பாலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் , “ நடிகர்கள் தங்கள் ரசிகர்களிடம் தற்கொலை மாதிரியான விபரீத முடிவுகள் எடுக்காமல் இருக்க அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
No comments