நான் தினமும் கோமியம் குடிக்கிறேன் - பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ..
டிஸ்கவரி சேனலில் வெளியாகும் மேன் VS வைல்டு மற்றும் இன் டூ த வைல்ட் நிகழ்ச்சிகள் புகழ்பெற்றவை. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பியர் கிரில்சின் சாகசங்களுக்காக உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் இதற்கு முன்னதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் பங்குபெற்றுள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் மேன் VS வைல்டு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்துகொண்டார். அந்த டீசரைத் தனது ட் விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அக்ஷய் குமார், ”பியர் கிரில்ஸ் உடன் #IntoTheWild நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு அதிக சவால்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், பியர் கிரில்ஸ் எனக்கு யானை சாணத்தில் உள்ள தண்ணீரை வடி கட்டி டீ போட்டு கொடுத்தார்” என்று கூறியிருந்தார்.
பியர் கிரில்ஸுடன் சாகசப் பயணம் மேற்கொண்டது குறித்த தனது அனுபவங்களை நடிகர் அக்ஷய் குமார் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பகிர்ந்துகொண்டார். அதில் நடிகைகள் ஹூமா குரேசி மற்றும் லாரா தத்தா ஆகியோரும் பங்கேற்றனர்.. அப்போது , “யானை சாணத்தில் தண்ணீரில் டீ குடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?” என்று அக்ஷய் குமாரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அக்ஷய் குமார், “பியர் கிரில்ஸ் சொன்னதும் நான் கவலைப்படவில்லை. ஏனெனில், நான் தினமும் மருத்துவ காரணத்துக்காக கோமியத்தைக் குடித்து வருகிறேன். அதனால், யானை சாணம் டீ பரவாயில்லை என்று எனக்குத் தோன்றியது” என்று தெரிவித்தார்.
No comments