Header Ads

  • சற்று முன்

    மூச்சுவிடாமல் பாடியவர் தனது இறுதி மூச்சியை நிறுத்திக் கொண்டார். எஸ்.பி.பி.மறைவினால் திரையுலகம் சோகத்தில் மூழ்கியது

     


    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பியின் மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


    50,000 பாடல்களுக்கும் மேல் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.  இசை உலகில் மேதையாகவும், மிகச்சிறந்த மனிதராகவும் ரசிகர்களால் போற்றப்படும் எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..


    தொடர்ந்து அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை 6.30 மணிக்கு அறிக்கை வெளியிட்டது.

     இந்நிலையில் இன்றும் அவரது உடல்நிலை தொடர்ந்து அதே நிலையில் இருந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


    அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டார். 



    இதனையடுத்து மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் எஸ்.பி.பி.சரண் இந்த தகவலை உறுதிபடுத்தினார்.


    அப்போது அவர் தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், எஸ்.பி.பி.யின் பாடல்கள் உள்ளவரை அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.


    எஸ்.பி.பியின் மறைவு திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad