Header Ads

  • சற்று முன்

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் மோடி... அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள்..

     


    நாடு முழுவதும் இன்று (மார்ச் 1) முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதுக்குள் இருப்பவர்களில் இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்  போடப்படுகிறது. 

    அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 1 ) காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்யில் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை பெற்றுக் கொண்டார். 

    பின்னர், இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கோவிட் 19 தொற்றுக்கு எதிரான முதல் தவணை தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நான் பெற்றுக்கொண்டேன். கொரோனாவுக்கு எதிரான சர்வதேச அளவிலான போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எவ்வளவு சீக்கிரம் நமது மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் செயல்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பூசியைப் பெறத் தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இத்தேசத்தை கொரோனா இல்லாத தேசமாக உருவாக்குவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad