Header Ads

  • சற்று முன்

    ”நல்ல காலம் பொறக்கப்போகுது”.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் திமுக தொண்டர்...

     


     

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தொகுதி பங்கீடு, பரப்புரை என தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.  அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

     அந்தவகையில் திமுக தொண்டர் ஒருவர் நூதன முறையில் ஆதரவு திரட்டியிருக்கிறார். சென்னையை அடுத்த ஆவடி, பூம்பொழில் நகரில்  திமுக தொண்டர் ஒருவர் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து  வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார், 

    சேலம் கோவிந்தன் என்னும்  அவர் அதிகாலை வேலையில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரது நூதன பரப்புரை யுக்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad