Header Ads

  • சற்று முன்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 36 பறக்கும் படைகள் நியமனம்- ஆட்சியர் அறிவிப்பு

     



    தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நட த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 26 -ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 36 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சிர் அலுவகத்தில், சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    இந்த குழுக்களில் ஒரு வட்டாட்சியர் அல்லது ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர், ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர், தலை மைக் காவலர், ஆயுதம் தாங்கிய காவலர் ஒருவரும் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் இருப்பர். இந்த குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் என கிரண்குராலா தெரிவித்தார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad