Header Ads

  • சற்று முன்

    60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி..

     

     

    கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தறுவாயை எட்டியுள்ளது. இதனால்  2-வது கட்டமாக இன்று (மார்ச் 1) முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும்  45 வயதிலிருந்து 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

     
    இதில் நீரிழிவு நோய் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பெற்றுகொள்ளும் 60 வயதுக்கு மேற்பட்டோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். 



    இணை நோய்கள் இருப்பவர்கள் அதுகுறித்த மருத்துவ சான்றிதழ்களை காண்பித்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீரிழிவு நோய், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், மிதமான மற்றும் தீவிரமான இதய நோய் இருப்போர், சிறுநீரக நோய் இருப்போர், 2 ஆண்டுகளாக தீவிரமான சுவாசம் தொடர்பான நோய்கள் இருப்போர் அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்றோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், ஹெச்ஐவி தொற்று உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேலும், தடுப்பூசி பெற விரும்புவோர், ஆரோக்கிய சேது, கோ-வின் ஆகிய செயலிகளில் முன்பதிவு செய்துகொண்டும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad