Header Ads

  • சற்று முன்

    கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கிய சிவக்குமார்.....!

    கொரோனா  இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் அரசு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்த சூழலில் அரசுக்கு உதவும் வகையில், பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 



    அந்த வகையில் நடிகர்கள்  சூர்யா, கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவகுமார்  ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ₹1 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.

    நிவாரண நிதியை வழங்கியபின் செய்தியர்களுக்கு பேட்டியளித்த சிவகுமார், ”கொரோனா வைரஸிலிருந்து மக்களை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அந்தவகையில் ரூ.1கோடியை எங்களால் முடிந்த சிறிய உதவியாக வழங்கியுள்ளோம். ”

    மேலும், தமிழகத்தில் தமிழ் படித்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 ஆண்டுகளாக சந்தித்திருக்கிறேன். அவரது அரசியல் வாரிசை முதன் முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad