Header Ads

  • சற்று முன்

    ’டாக்டே’ புயல் நிவாரணமாக 1000 கோடி ஒதுக்கீடு..பிரதமர் மோடி அறிவிப்பு..


    குஜராத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த 'டாக்டே' புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு 7 பேர் பலியாகினர். நுாற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மரங்கள் சாய்ந்ததால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர், விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினர். 
    புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் பெரும்பாலானோர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். 

    இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் குஜராத் சென்றடைந்தார். உனா, டியூ, ஜபராபாத், மஹூவா உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். 

    அதன் பின்னர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ 'டாக்டே' புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுடன் இந்திய அரசு துணை நிற்பதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என  குறிப்பிட்டுள்ளார். 

    பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், குஜராத் அரசு உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட மத்திய அரசு உடனடியாக 1000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும். மாநிலத்தில் பாதிப்புகளை பார்வையிட, மத்திய குழுவை குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad