Header Ads

  • சற்று முன்

    பத்திரிக்கையாளர்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின் உத்தரவு...





    கொரோனா நோய் தொற்றை பொறுத்தவரை இந்த காலத்தில் பல்வேறு சிரமங்களுடன் ஊடகவியலாளர்கள் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். மேலும் மக்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இந்த காலகட்டத்தில் இயங்கி வருவதால் அவர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரிய கூடிய செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், அரசு அங்கீகார அட்டை, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை போன்ற ஏதாவது ஒன்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட வைத்திருக்கக்கூடியவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த ஆட்சியின் போது 3000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனை உயர்த்தி வழங்க பல்வேறு கோரிக்கைகள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் முதலமைச்சர் அதனை பரிசீலித்து தற்போது ஊரடவியலாளர்களுக்கு ஊக்கத்தொகையை 5000ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.


    அதேபோன்று கடந்த ஆட்சியின் போது, பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட  செய்தியாளர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக இறக்க நேரிட்டால், அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி  ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையினைப் பரிவுடன் பரிசீலித்து, அதனை 10 லட்சமாக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad