Header Ads

  • சற்று முன்

    கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகைப் பொருட்கள் - தமிழக அரசு அறிவிப்பு

     


    கலைஞர் ருணாநிதி பிறந்த நாள் அன்று மக்களுக்கு 13 வகை மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாக வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து நிலையில்  மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 அளிப்பதாக அறிவித்தது. இதில் முதல் தவணையாக ரூ.2000 தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    வரும் ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு மீதமுள்ள ரூ.2000 வழங்கப்பட உள்ளது. ஊரடங்கையொட்டி கொரோனா நிவாரணமாகப் பொதுமக்களுக்கு 13 வகை மளிகைப் பொருட்களை வழங்க உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.




    இதில் கோதுமை மாவு, உப்பு, ரவை, பருப்பு வகைகள், புளி சர்க்கரை, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், குளியல் சோப்பு, துவைக்கும் சோப்பு ஆகியவை அடங்கும் என அறிவித்துள்ளது. 

    இதில்  2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் தர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் அமலுக்கு வருகிறது.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad