Header Ads

  • சற்று முன்

    ஐபிஎல் 14 சீசனின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்- பிசிசிஐ

     




    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 ஆவது சீசன் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில்  4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து போட்டி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சியப் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. தொடர்ந்து ஐபிஎல் 14 ஆவது சீசன் ரத்து செய்யப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்தது.  

     இதனையடுத்து கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தியது. அதில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியப் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷூக்லா தெரிவித்துள்ளார். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad