Header Ads

  • சற்று முன்

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் ரூ.1 கோடி நிதியுதவி... குவியும் பாராட்டுக்கள்...


    கொரோனா இரண்டாவது அலை  நாளுக்கு நாள் அதிகரித்துக்குக் கொண்டிருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நன்கொடை வழங்மாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் பல திரை பிரபலங்களும் நிறுவனங்களும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றன.

    நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் அவரது கணவர் விசாகனும் இணைந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.இருவரும் தங்களது 'அபெக்ஸ் லெபரட்ரீஸ்' சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்துள்ளனர். இவர்களின் உதவிக்கு சமுக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad