Header Ads

  • சற்று முன்

    கொரோனா நிவாரணமாக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஸ்..


    தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். 

     அடிப்படையில் அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்கள்,  திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள். அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கும் பெப்சி திரைப்படத் தொழிலாளர் அமைப்புக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளார்.

    , கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகளை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள் இதனால் திரைப்படப் பிரபலங்கள் நிதியுதவி செய்யவேண்டும் என்று பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad